Tuesday 30th of April 2024 03:22:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் தொடரும் கொரோனா பலியெடுப்பு: மொத்த கொரோனா உயிரிழப்பு 27 ஆயிரத்தை கடந்தது!

தமிழ்நாட்டில் தொடரும் கொரோனா பலியெடுப்பு: மொத்த கொரோனா உயிரிழப்பு 27 ஆயிரத்தை கடந்தது!


தமிழ்நாட்டில் நாளாந்த தொற்றாளர்களது எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதே நிலையில் நீடித்து வருகின்றது.

நேற்று (ஜூன்-06) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 21 ஆயிரத்து 421 ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 2 ஆயிரத்து 645 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 38 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கோயம்புத்தூரில் இதுவரை மொத்த தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 23 ஆகவும் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 506 ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் 1 ஆயிரத்து 644 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 50 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 628 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 7 ஆயிரத்து 475 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 22 இலட்சத்து 37 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 434 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 2 இலட்சத்து 44 ஆயிரத்து 289 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE